சினிமா செய்திகள்

இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய உத்தரவு

Published On 2025-12-19 15:33 IST   |   Update On 2025-12-19 15:33:00 IST
  • லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய அல்லிக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனந்தம், பீமா, சண்டகோழி பிரபல திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லிங்கு சாமி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருப்பதி ப்ரதர்ஸ் பிலிம் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு ரூ.35 லட்சம் பணத்தை ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார்.

இந்த கடனை லிங்குசாமி திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடனை வட்டியுடன் ரூ.48.68 லட்சத்தை செலுத்துமாறு அந்த நிறுவனத்தில் மேலாளர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்து வந்ததுள்ளது.

இந்நிலையில் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் ரூ.48.68 லட்சமாக 2 மாதத்திற்குள் திருப்பித்தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News