செய்திகள்

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி: டி.கே.சிவக்குமார்

Published On 2018-12-05 01:43 GMT   |   Update On 2018-12-05 01:43 GMT
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #DKShivakumar
பெங்களூரு :

நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் முன்னாள் மந்திரிகள் 3 பேர் உள்ளனர். அது யார் என்பது எங்களுக்கு தெரியும். ‘நெருப்பு இல்லாமல் புகையுமா?’.

ஜிந்தால் மருத்துவமனையில் என்ன நடந்தது, யார்-யாருக்கு நெருக்கடி கொடுத்தனர் என்பதும் எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒன்றும் தெரியாமல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. யார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் செயல் தலைவரை கைது செய்துள்ளனர். இதை கண்டிக்கிறேன். இது ஜனநாயக படுகொலை ஆகும். முதல்- மந்திரி சந்திரசேகர் ராவ் தோல்வி பயத்தால், இவ்வாறு செய்கிறார். காங்கிரஸ் கட்சி எப்போதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது இல்லை. யார் பிரசாரம் செய்ய வந்தாலும் அவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். #BJP #DKShivakumar
Tags:    

Similar News