செய்திகள்

தெலுங்கானாவில் பிரதமர் மோடி நாளை சூறாவளி பிரசாரம்

Published On 2018-11-26 14:28 GMT   |   Update On 2018-11-26 14:28 GMT
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை இரு பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #Modicampaign #Telanganapolls
ஐதராபாத்:

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நேற்று 4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை இரு பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

டெல்லியில் இருந்து தெலுங்கானாவுக்கு நாளை வருகைதரும் மோடி, முதலில் நிஜாமாபாத் பிரசார கூட்டத்திலும், பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் மஹபூப்நகரில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் உரையாற்றுகிறார் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் கே.லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார். #Modicampaign #Telanganapolls
Tags:    

Similar News