செய்திகள்

கட்டாய விடுப்பு விவகாரம் - அலோக் வர்மா வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-10-26 13:12 IST   |   Update On 2018-10-26 13:12:00 IST
கட்டாய விடுப்பு உத்தரவுக்கு எதிராக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. #CBIVsCBI #AlokVerma
புதுடெல்லி:

சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு, உடனடியாக பொறுப்பேற்றார்.



இதையடுத்து கட்டாய விடுப்பு உத்தரவை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணக்கு வந்தது.

அலோக் வர்மா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். அப்போது பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தலைமை நீதிபதி கொண்ட தேர்வுக்குழுவின் ஒப்புதலுடன் சிபிஐ இயக்குனர் நியமிக்கப்பட்டதாகவும், அவரது பணியை தொடரவிடாமல் ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் தடுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் மத்திய அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CBIVsCBI #AlokVerma
Tags:    

Similar News