செய்திகள்

என்னை எதிர்த்து போட்டியிட தைரியம் இருக்கிறதா? - ராகுலை வம்புக்கு இழுத்த சாக்சி மகராஜ்

Published On 2018-10-08 11:02 GMT   |   Update On 2018-10-08 11:02 GMT
என்னை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன் என சாக்சி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.
உன்னாவ்:

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்பி சாக்சி மகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்னை எதிர்த்து (உன்னாவ் தொகுதியில்) போட்டியிட தயாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். அவர் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டு விலகுவேன். ஆனால் தோல்வி அடைந்தால் இத்தாலிக்கு செல்ல வேண்டும்.

ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரையை எதிர்க்கவில்லை. பா.ஜ.க. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஆனால், அதுபோன்ற யாத்திரைக்கு தூய்மை அவசியம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, யாத்திரையை தொடங்கும் முன்வாக அவர் தூய்மையானவராக ஆகியிருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு தரிசனம் செய்வதை நியாயப்படுத்த முடியாது.

எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படுகின்றன. அதனால்தான் மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார். #SakshiMaharaj
Tags:    

Similar News