செய்திகள்

அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது- மோகன் பகவத்

Published On 2018-10-02 16:29 IST   |   Update On 2018-10-02 16:29:00 IST
அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். #Ramtemple #MohanBhagwat
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் நகரில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திவரும் பதாஞ்சலி பீடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆனால், இதற்கு உகந்த காலம் கைகூட சிறிது நேரம் ஆகலாம். எல்லா அரசாங்கங்களுக்கும் சில வரம்பு எல்லைகள் உள்ளன. அந்த வரம்புக்குள்தான் அவர்கள் செயல்பட முடியும்.

ஆனால், சாதுக்களுக்கும் ஜீயர்களுக்கும் அத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது. மதம், நாடு மற்றும் சமூகத்தின் உயர்வுக்காக அவர்கள் பாடுபட வேண்டும்.

ராமபிரான் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வம் என்பதால் அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை  எதிர்க்கட்சிகளால்கூட வெளிப்படையாக தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #Ramtemple #MohanBhagwat
Tags:    

Similar News