செய்திகள்

மக்களை ஓட்டுக்காக ஏமாற்றியது பாஜக - தெலுங்கானா மந்திரி ராமா ராவ் குற்றச்சாட்டு

Published On 2018-09-17 08:20 GMT   |   Update On 2018-09-17 08:20 GMT
தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களை பாஜக ஏமாற்றி விட்டதாக தெலுங்கானா மாநில மந்திரி ராமா ராவ் குற்றம்சாட்டியுள்ளார். #Telangana #MinisterRamaRao #BJP #AmitShah
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியை அவரே கலைத்து தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார். மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதனை கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மக்களின் வரிப்பணத்தை தேர்தலுக்காக செலவழித்து அதிக சுமையை மக்கள் மீது சந்திரசேகர் ராவ் சுமத்துவதாக விமர்சித்து இருந்தார்.



அமித் ஷாவின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ராமா ராவ், பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது முன்கூட்டியே தேர்தலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 2004-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட தேர்தலை முன்கூட்டியே நடத்தியதாக சுட்டிகாட்டினார். மாநிலத்துக்கு என எவ்வித சலுகைகளும் மத்திய அரசு வழங்காத நிலையில், 17.17 சதவிகிதம் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் ராமா ராவ் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் வளர்ச்சியில் தெலுங்கானா முக்கிய பங்காற்றுவதாகவும், வருவாய் ஈட்டுவதற்கு மாநிலங்களின் பங்கை அமித் ஷா உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களை பாஜக ஏமாற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். #Telangana #MinisterRamaRao #BJP #AmitShah
Tags:    

Similar News