செய்திகள்

மிளகாய் எப்படி விளைகிறது என்பது ராகுலுக்கு தெரியுமா - சிவராஜ்சிங் சவுகான் கேள்வி

Published On 2018-09-17 00:18 GMT   |   Update On 2018-09-17 00:18 GMT
காங்கிரஸ் தலைவரான ராகுலுக்கு மிளகாய் எப்படி வயல்வெளிகளில் விளைகிறது என தெரியுமா? என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivrajSinghChouhan #RahulGandhi #Chilli
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள நர்சிங்கர்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியப்பிரதேசம் மாநிலம் தலைநகரான போபாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்தார். அவர் 15 கிலோ மீட்டருக்கு சாலை வழியாக சென்று மக்களை சந்தித்துள்ளார். 

ஆனால், அவருக்கு வயல்வெளிகளில் மிளகாய் மேல்புறமாகவா அல்லது கீழாகவா எப்படி விளைகின்றது என தெரியுமா? 
விவசாயம் பற்றி தெரியாதவர் அதை பற்றி அக்கறை கொள்ளலாமா?

ராகுல்ஜி உங்கள் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு அதிகமாக 18 சதவீத வட்டியுடன் லோன்களை வழங்கி உள்ளீர்கள். நாங்களோ பூஜ்ய சதவீதத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார். #ShivrajSinghChouhan #RahulGandhi #Chilli
Tags:    

Similar News