weekly rasipalan 11.1.2026 to 17.1.2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- மேஷம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம்.
- கன்னி உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.
மேஷம்
எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் உச்சம் பெற்று ராசியை தனது 4ம் பார்வையால் பார்க்கிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி கூடும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். நீண்டநாளாக தீராத, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். விவேகமாக சிந்தித்து தொழிலை வளப்படுத்துவீர்கள். எதையும் எதிர்கொண்டு லாபகரமான நிலையை அடையப் போகிறீர்கள் தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் ஏற்படும்.உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். 13.1.2026 அன்று மாலை 5.21 முதல்16.1.2026 மாலை 5.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தவொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.சிக்கனத்துடன் செயல்பட்டால் விரயங்களை தவிர்க்க முடியும். முருகனை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து வழிபட நினைத்தது நடக்கும்.
ரிஷபம்
முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தை நோக்கி செல்கிறார். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரலாம். எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும். குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணயோகம் கை கூடி வரும்.16.1.2026 மாலை 5.48 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆடம்பர செலவு களை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. நெய் தீபம் ஏற்றி அம்பிகையை வழிபடுவது நல்லது.
மிதுனம்
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெறுகிறார். வார இறுதி நாளில் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். முக்கிய கடமைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு , உற்சாகம் பிறக்கும்.மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலர் பயன்படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். தன யோகம் சிறப்பாக அமையும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். திருமண முயற்சி விரைவில் நிறைவேறும். பெண்கள் புதிய ஏலச் சீட்டு தொடங்குவார்கள். குழந்தைப்பேறு உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சீராகும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் உண்டாகும். புதன்கிழமை கருடாழ்வாரை வழிபடவும்.
கடகம்
மகிழ்ச்சியான வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் சமசப்தம ஸ்தானத்தில் நின்று ராசியை பார்க்கிறார். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். ஆரோக்கியம், தொழில், கல்வி உத்தியோகம் போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்சனைகள் சீராகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும். தந்தை வழி உறவு மேம்படும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். கொடுக்கல், வாங்கல் சீராகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. ஸ்ரீ காலபைரவரை வழிபடவும்.
சிம்மம்
தேவையற்ற கடனை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரக்தி மனப்பான்மை அதிகமாகும். ஆனால் குருவின் பார்வைபட்ட இடங்கள் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எந்தக்கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும். திறமையான வேலையாட்கள் இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். தன லாப அதிபதி புதனால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சில தம்பதிகள் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடவும்.
கன்னி
உற்சாகம் பொங்கும் மகிழ்ச்சியான வாரம்.ராசி அதிபதி புதன் 4,7ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தனித் திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். சிலர் சொந்த வீட்டில் இருந்து மன மாற்றத்திற்காக வாடகை வீடு செல்லலாம். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். திருமணத்தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். சொத்து தொடர்பான செயல்களில் இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்கவும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். கருடாழ்வாரை வழிபட நிரந்தரமான முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் லாப அதிபதி சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உள்ளது. வாழ்வில் மறக்க முடியாத இனிய நல்ல சம்பவங்கள் நடைபெறும். கடந்த கால நெருக்கடிகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். அரசு வழி ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமானப் பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையான வாரம். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார்.ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். பெரிய மனிதர்களின் தொடர்பு அரசியல் செலவு ஏற்படலாம். உடன் பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். மனதில் நிலவிய வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு குறையும். இடப்பெயர்ச்சி நடக்கும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். நவீனகரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும்.விநாயகரை வழிபட தடைகள் அகலும்.
தனுசு
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் 7,10ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து எண்ணிய பலனை அடைவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தன்நிறைவோடு வாழ முடியும். பொருளாதார நெருக்கடி, கடன் படிப்படியாக குறையும்.எதிர்பாராத தனவரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். அடமானம் வைத்த பொருளை சொத்துக்களை மீட்பீர்கள். எப்பொழுதோ வாங்கி வைத்த பங்குகளின் மதிப்பு உயரும். அர்த்தாஷ்டமச் சனி நடந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில் அனுகூலமான சூழல் காணப்படும்.தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். திருமணத்தடை அகலும். மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து நவகிரக குரு பகவானை வழிபடவும்.
மகரம்
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் அஷ்டம அதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். முன் கோபத்தால் பகைமை உருவாகும். சில முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் சமாளிக்க முடியும். முன்னோர் சொத்துப் பிரச்சனை நீதிமன்ற படி ஏற வைக்கும் என்பதால் பங்காளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். உண்மையான நண்பர்களையும் ஏமாற்றுபவர்களையும் அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். தந்தையுடன் கருத்து வேறுபாடு அல்லது தந்தையால் நஷ்டம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய மனை வாங்கி வீடு கட்டுவது போன்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும்.
கும்பம்
நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் அதிகரிக்கும். குலத் தொழில் செழித்து வளரும்.ராசியில் ராகு இருப்பதால் சிறிய வீட்டில் வாழ்ந்த சிலர் வசதியான வீட்டிற்கு செல்வார்கள்.சுகபோக வாழ்க்கை கிடைக்கும். லவுகீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும்.கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் தொகை கிடைக்கும்.விவாகரத்து வழக்கு பிரச்சனை முடிவுக்கு வரும்.11.1.2026 அன்று அதிகாலை 4.52 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மந்தாரை மலர்களால் நவகிரக ராகு பகவானை வழிபடவும்.
மீனம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம். ஜென்மச் சனியால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இல்லம் திரும்புவார்கள். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு நீதி மன்ற வழக்குகளுக்காக அதிக பணம் செலவு செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். திருமணத் தடைகள் அகலும். புத்திர பிராப்தம் உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த காலமாகும்.குல தெய்வ கடாட்சம் கிடைக்கும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். 11.1.2026 அன்று அதிகாலை 4.52 முதல் 13.1.2026 அன்று மாலை 5.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவுகள் ஏற்படும்.பண விஷயத்தில் யாரையும் நம்ப கூடாது.உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406