வழிபாடு

#SaniPeyarchi கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனி பகவான்- திருநள்ளாறு கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2026-03-06 09:09 IST   |   Update On 2026-03-06 09:09:00 IST
  • சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெற்றது.
  • அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறில் உலக பிரசித்திப் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

மேலும் சனீஸ்வர பகவான் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். தற்போது இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இன்று காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனைகள் நடைபெற்றது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர். அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய, தேவஸ்தான நிர்வாகம் இலவச தரிசனம் மற்றும் 3 வகையான கட்டண தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

நளன் குளத்தில் அனைத்து பக்தர்களும் சவுகரியமாக நீராடும் வகையில், குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News