செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2018-09-16 17:56 GMT   |   Update On 2018-09-16 17:56 GMT
இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #ISRO #PSLVC42 #Modi
புதுடெல்லி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.



நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

இந்நிலையில், இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி-42 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்தின் இரண்டு செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளோம். ராக்கெட்டை வெற்றிகரமாக நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #ISRO #PSLVC42 #Modi
Tags:    

Similar News