செய்திகள்

மேற்கு வங்காள முன்னாள் எம்.பி உடல்நலக்குறைவால் மரணம்

Published On 2018-09-14 07:23 GMT   |   Update On 2018-09-14 07:23 GMT
மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் எம்.பி.யும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தினேஷ் சந்திர ஜோர்டர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். #WestBengal #CPI #DineshChandraJoarder
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா பாராளுமன்ற தொகுதியில் 1971-1977 வரை எம்.பி.யாக இருந்தவர் தினேஷ் சந்திர ஜோர்டர். 91 வயதான இவர், வயது மூப்பு காரணமாக வரும் உடல்நலக்குறைபாடுகளால் அவதியுற்று வந்த நிலையில், இன்று அவர் வீட்டிலேயே மரணமடைந்தார்.

இவர், 1977-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1987 முதல் 1992 வரை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துவந்துள்ளார்.

வழக்கறிஞராக தனது வாழ்வை துவக்கிய இவர், அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக தற்போது மரணம் அடைந்துள்ளார். #WestBengal #CPI #DineshChandraJoarder
Tags:    

Similar News