தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை - மு.க.ஸ்டாலின்
- இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.
திண்டுக்கல்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திண்டுக்கல் சென்றார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற விழாவில் புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாற்று திறனாளி பயனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், வேளாண் கருவிகள், மகளிர் திட்டத்தின் மூலமாக 4 சக்கர வாகனங்கள், தாட்கோ மூலமாக 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 212 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.13 ஆயிரத்து 342 கோடியில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* திண்டுக்கல் என்பது புரட்சி, எழுச்சி, வீரத்தின் பெயர்.
* ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் நடமாடிய இடம் திண்டுக்கல்.
* தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திப்பதில் பெருமை.
* இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
* 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 1.79 கோடி மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டது.
* தி.மு.க. ஆட்சியில் கடந்த 4.5 ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
* இந்த விழா அரசு விழாவா? அல்லது மாநாடா? என்று வியப்பாக இருக்கிறது.
* கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.
* திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.