தமிழ்நாடு செய்திகள்

எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்?- ஜோதிமணி எம்.பி.யிடம் கேள்வி கேட்ட வாலிபர் விரட்டியடிப்பு

Published On 2026-01-07 13:16 IST   |   Update On 2026-01-07 13:16:00 IST
  • காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி நிதியையும் குறைத்து விட்டது.
  • இந்த திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி கிராமத்திற்கு கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வருகை தந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்து வந்தார். கல்வார்பட்டியில் ஜோதிமணி எம்.பி. பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் கிராமத்திற்கு என்ன செய்தீர்கள் என கேட்டவாறு ஒரு வாலிபர் அவரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதனால் அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை விரட்டியடிக்க முயன்றனர். இருந்த போதும் அந்த வாலிபர் விடாமல் என்னை அடி.. என அவர்களிடம் தகராறு செய்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த வாலிபரை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். அதன்பின் அந்த வாலிபர் தெருவில் சென்ற நாயை தூக்கி கொஞ்சினார். அதன் பிறகுதான் அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.

அதன்பின் பொதுமக்களிடம் பேசிய ஜோதிமணி எம்.பி., காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி நிதியையும் குறைத்து விட்டது. இந்த திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மகாத்மா காந்தியின் பெயர் வைத்த காரணத்தினாலேயே மத்திய அரசு இத்திட்டத்தை முடக்கி உள்ளது என்றார். 

Tags:    

Similar News