செய்திகள்

ஆந்திராவில் இரும்பு தொழிற்சாலை அமைக்கக்கோரி எம்.பி. ரமேஷ் 3-வது நாளாக உண்ணாவிரதம்

Published On 2018-06-22 10:03 GMT   |   Update On 2018-06-22 10:03 GMT
ஆந்திர மாநிலத்தில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அம்மாநில எம்.பி ரமேஷ் 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #BJP #AndhraPradesh
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும், ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அப்போது அளித்திருந்தது.

ஆனால் இந்த 4 ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. மேலும், பா.ஜ.க மீதான பல்வேறு விமர்சனங்களையும் வைத்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அளித்த வாக்குறுதியின்படி, கடப்பா மாவட்டத்தில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில தெலுங்குதேசம் எம்.பி ரமேஷ் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஜில்லா பரிஷத் அலுவலகத்தில் நடைபெறும் இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்து வருகிறது. #BJP #AndhraPradesh
Tags:    

Similar News