செய்திகள்

டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்திப்பு ரத்து - சிகிச்சைக்காக பெங்களூரு செல்கிறார் கெஜ்ரிவால்

Published On 2018-06-20 11:58 GMT   |   Update On 2018-06-20 12:18 GMT
உடல்நலக் குறைவால் டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை இன்று ரத்துசெய்த முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். #ArvindKejriwal #KejriwalinBengaluru #Kejriwaltreatment
புதுடெல்லி:

டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னர் அலுவலகத்துக்குள் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்திய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது உள்ளிருப்பு போராட்டத்தை முடித்து கொண்டார்.

கவர்னரின் அறிவுறுத்தலின்படி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சந்தித்துப் பேசுவார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 9 நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகியுள்ளதால் சிகிச்சைக்காக நாளை கெஜ்ரிவால் பெங்களூரு புறப்பட்டு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வப்போது பெங்களூருவில் உள்ள தனியார் இயன்முறை (நேச்சுரோபதி) மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #ArvindKejriwal #Kejriwaltreatment
Tags:    

Similar News