செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு

Published On 2018-05-31 11:57 IST   |   Update On 2018-05-31 11:57:00 IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. #SterliteProtest #BanSterlite #SterliteCaveatPetition
புதுடெல்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை தமிழக அரசு துண்டித்தது. பின்னர் போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியாகினர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முட தமிழக அரசு முடிவு எடுத்து, அதற்கான அரசாணையை வெளியிட்டது.



ஆனால், அரசாணை வலுவாக இல்லாததாலும், ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறியதாக போதிய ஆதாரங்களை அரசு சமர்ப்பிக்காததாலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.



இந்த சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.  #SterliteProtest #BanSterlite #SterliteCaveatPetition

Tags:    

Similar News