இந்தியா

மணிப்பூரில் தலைமை காவலருக்கு ஆதரவான போராட்டம் வன்முறையாக வெடித்ததில் இருவர் பலி

Published On 2024-02-16 02:16 GMT   |   Update On 2024-02-16 02:16 GMT
  • ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்களுடன் செல்பி எடுத்துள்ளார் தலைமை காவலர்.
  • தலைமைக் காவலரை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்ததால், மீண்டும் வேலை வழங்குமாறு போராட்டம்.

மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுடன் சேர்ந்த செல்பி எடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக சுரசந்த்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமைக் காவலர் மீது ஒழுங்கை நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதற்கு ஆயுதம் ஏந்திய குழு மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

சுமார் 300 முதல் 400 பேர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கலைந்த செல்ல உத்தரவிட்ட நிலையில் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளனர்.

அப்போது போராட்டம் நடத்திய கும்பல் எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், கல்வீசி தாக்கல் நடத்தியுள்ளனர். போலீசார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

குகி-சோ பழங்குடியின மக்கள், பொலீசார் தங்கள் கிராமங்களை குறிவைத்து தாக்கி வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர. ஆனால், போலீசார் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும், "கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களை" ஊக்குவிப்பதில் குகி-சோ கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவதாக தெரித்துள்ளனர்.

Tags:    

Similar News