உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விஷ்ணுவை கைது செய்தார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாதூரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 25). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சூனாம்பேடு அடுத்த ஆரோவில் நகரை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விஷ்ணுவை கைது செய்தார்.