உள்ளூர் செய்திகள்
காரைக்கால் கோட்டுச்சேரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- சட்டைப்பையில், 210 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அருளப்பிள்ளை தெருவில், வாலிபர் ஒருவர், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை விற்பதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றார். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது, அவரது சட்டைப்பையில், 210 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருமைஞானம் வேப்பஞ்சே ரியைச்சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது24) என்பது தெரியவந்தது. மேலும், அவரது வீட்டு குளியலறையில் மறைத்து வைத்திருந்த 500 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.