உள்ளூர் செய்திகள்

விழாவில் ஒரு மாணவிக்கு காளீஸ்வரி கல்லூரி செயலாளர் அ.பா.செல்வராசன் பணி நியமன ஆணை வழங்கினார்.

மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

Published On 2022-06-06 14:09 IST   |   Update On 2022-06-06 14:09:00 IST
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 627 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
  • பணி அமர்வு மைய பொறுப்பாளர் அக்சய் ஜோசப் டிலன் வரவேற்றார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி பணி அமர்வு மையத்தின் சார்பில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

பணி அமர்வு மைய பொறுப்பாளர் அக்சய் ஜோசப் டிலன் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், வறுமையிலும் பிள்ளைகளை படிக்கும் வைக்கும் பெற்றோர்களை நினைவுகூர்ந்து பொருளாதார ரீதியாக மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மாணவர்களின் பொருளாதாரம் உயர்ந்தால் நமது வட்டாரமும், அவர்களது குடும்பமும் உயர்ந்த நிலையை அடையும். மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்போது கல்வி மற்றும் பொருளாதார நிலையில் சமூகம் சிறப்பான, குற்றமற்ற மாபெரும் சமுதாயமாக உருவாகும் என்றார்.

துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கல்லூரி செயலாளர்அ .பா.செல்வராசன், பல்வேறு நிறுவனங்களின் பணி நியமன ஆணைகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 627 மாணவர்களுக்கு வழங்கினார். பணி அமர்வு மையத்தின் பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப்பொறுப்பாளர்கள் வெங்கடேஷ்குமார், அக்சய் ஜோசப் டிலன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News