- ராஜபாளையம் அருகே 550 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
550 கிலோ புகையிலை பொருட்கள்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து அதில் இருந்த வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த மூடையை சோதனையிட்டபோது, அதில் 550 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் கடத்துவது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
தொடர் விசாரணையில், அதனை கடத்தி வந்த முகவூரை சேர்ந்த ஜெயபாஸ்கர் மகன் அருண்குமார்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.