உள்ளூர் செய்திகள்

நகை சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி

Published On 2023-01-24 12:14 IST   |   Update On 2023-01-24 12:14:00 IST
  • விருதுநகரில் நகை சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி செய்த 2 பேர் மதுரை கோர்ட்டில் அடைக்கப்பட்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், முத்துமாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த கருப்பசாமி உள்ளிட்ட சிலர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நகை சீட்டு நடத்தி ரூ. 43 லட்சம் மோசடி செய்ததாக நகைக்கடை அதிபர் பாலாஜி வரதராஜன் மற்றும் பால விக்னேஷ், பாவாளி பவுன்ராஜ், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சுப்பிரமணியன் மனைவி முத்துமாரி ஆகியோர் மீது புகார் கொடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவுன்ராஜ், முத்துமாரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாலாஜி வரதராஜன் உள்ளிட்ட 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பால விக்னேஷ், கார்த்திகேயன் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News