உள்ளூர் செய்திகள்

பூப்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2022-11-20 14:12 IST   |   Update On 2022-11-20 14:12:00 IST
  • விருதுநகர் மாவட்டத்தில் பூப்பந்து பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் கேலோ இந்திய மையம் அமைத்து செயல்படுத்துவதற்கு இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கேலோ இந்திய விளையாட்டு மையம் அமைக்க பூப்பந்து விளையாட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது,

ஆகையால் முன்னாள் சாம்பியன் விளையாட்டு வீரர் பயிற்றுநராக நியமிக்கும் வகையில் பூப்பந்து விளையாட்டு பிரிவில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர் பயிற்றுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 30-ந் தேதி வரை வழங்கப்படும். தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News