குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வாலிபர் பலி
- மைல் கல்லில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வாலிபர் பலியானார்.
- 2 பேரையும் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மலை யடிப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது21). இவர் நேற்று மாலை தனது நண்பர் சரவணக்குமாரை அழைத்து கொண்டு குற்றாலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் தளவாய்புரம் விலக்கு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த மைல்கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரமேஷ், சரவணகுமார் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அப்பகுதியை சேர்ந்த வர்கள் 2 பேரையும் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரமேஷ் மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து குறித்து சேத்தூர் புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.