உள்ளூர் செய்திகள்

உடன்குடி பஜாரில் பல மாதங்களாக தேங்கி கிடந்த தண்ணீர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் உடன்குடி பஜாரில் தேங்கிய தண்ணீர் அகற்றம்

Published On 2022-11-19 08:53 GMT   |   Update On 2022-11-19 08:53 GMT
  • இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது.
  • உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார்

உடன்குடி:

உடன்குடி மெயின் பஜார் நான்கு முக்கு சந்திப்பு சாலை மழையால் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கும், பஜாரில் உள்ள வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்தது. மேலும் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குள்ளே தண்ணீர் புகுந்து விடும் சூழ்நிலை பல மாதங்களாக இருந்தது வந்தது.

இது பற்றி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று இரவு அதிரடியாக பணி நடந்தது. மேலும் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உடன்குடிபேரூராட்சி தலைவர் ஹுமைரா செயல் அலுவலர் பாபுல வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது வார்டு கவுன்சிலர்கள் அஸ்ஸாப் அலி, பிரதிப் கண்ணன், முகமது ஆசிப், மற்றும் பலர் உடன் இருந்தனர் தண்ணீர் தேங்காதபடி நிரந்தர நடவடிக்கை எடுத்த அமைச்சர் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடன்குடி உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பக்தர்கள் எனஅனைவரும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News