உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Published On 2023-03-03 15:29 IST   |   Update On 2023-03-03 15:29:00 IST
  • முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
  • 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பட்டுக்கோட்டையை சேர்ந்த வீரசேகரன் என்பவர், தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரைக்காலை சேர்ந்த நிரவி சுரேஷ் மற்றும் கம்பெனி சுரேஷ் ஆகியோர் போலி மதுபானம் தயாரித்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய வீரசேகரன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார்.

இதை தொடா்ந்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

அதன்பேரில் வீரசேகரன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நிரவி சுரேஷ் மற்றும் கம்பெனி சுரேஷ் ஆகிய 2 பேரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News