உள்ளூர் செய்திகள்

துறையூர் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2022-06-27 15:37 IST   |   Update On 2022-06-27 15:37:00 IST
  • லோகநாதன் (70 தனது சொந்த வேலையை முடித்துவிட்டு, துறையூர் பாலக்கரையில் இருந்து சொரத்தூர் செல்வதற்காக சிலோன் ஆபீஸ் அருகே சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் லோகநாதன் பலியானார்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மேட்டு சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (70). இவர் சம்பவத்தன்று துறையூரில் தனது சொந்த வேலையை முடித்துவிட்டு, துறையூர் பாலக்கரையில் இருந்து சொரத்தூர் செல்வதற்காக சிலோன் ஆபீஸ் அருகே சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம், சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், வாகனத்தின் ஓட்டுநரான தோனூர் கிராமத்தைச் சேர்ந்த சாய் குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News