தமிழ்நாடு செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு

Published On 2026-02-05 10:34 IST   |   Update On 2026-02-05 10:34:00 IST
  • சென்னை மெட்ரோ ரெயில் நிறு​வனம் 2024-25-ம் நிதி​யாண்​டின் அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது.
  • பயணக் கட்டண வரு​வாய் மட்​டுமின்​றி, இதர பிரிவு​களில் வரு​வாய் அதி​கரித்​துள்​ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயிலில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர வழிகளிலும் வருவாயை திரட்டும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

வாகன நிறுத்தும் இடம் அதிகரிப்பு, மெட்ரோவுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகை விடுவது, ரெயில்கள், ரெயில் நிலையங்களில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதிப்பது உட்பட பல்வேறு வகைகளில் வருவாயை ஈட்டுகிறது. இதனால் அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2024-25-ம் நிதியாண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.369.49 கோடியிலிருந்து ரூ.425.64 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது 15 சதவீதம் அதிகமாகும்.

பயணக் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர பிரிவுகளில் வருவாய் அதிகரித்துள்ளது. இதர பிரிவு வருவாய் ரூ.104.30 கோடியிலிருந்து ரூ.135.39 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகமாகும்.

வரும் ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கையும், இதர பிரிவுகளில் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்பதால், வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News