என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய் அதிகரிப்பு"

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறு​வனம் 2024-25-ம் நிதி​யாண்​டின் அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது.
    • பயணக் கட்டண வரு​வாய் மட்​டுமின்​றி, இதர பிரிவு​களில் வரு​வாய் அதி​கரித்​துள்​ளது.

    சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயிலில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர வழிகளிலும் வருவாயை திரட்டும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

    வாகன நிறுத்தும் இடம் அதிகரிப்பு, மெட்ரோவுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகை விடுவது, ரெயில்கள், ரெயில் நிலையங்களில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதிப்பது உட்பட பல்வேறு வகைகளில் வருவாயை ஈட்டுகிறது. இதனால் அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2024-25-ம் நிதியாண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.369.49 கோடியிலிருந்து ரூ.425.64 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது 15 சதவீதம் அதிகமாகும்.

    பயணக் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர பிரிவுகளில் வருவாய் அதிகரித்துள்ளது. இதர பிரிவு வருவாய் ரூ.104.30 கோடியிலிருந்து ரூ.135.39 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகமாகும்.

    வரும் ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கையும், இதர பிரிவுகளில் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்பதால், வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் ரூ.24,527.39 கோடி வருவாயை வணிக வரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.
    • கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.12,161.51 கோடியை விட ரூ.3,523.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வணிக வரித்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வணிக வரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    வணிக வரித்துறையில் நடப்பு நிதியாண்டில் 28.2. 2023 வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458.96 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதேநாளில் இத்துறையின் வருவாய் ரூ.92,931.57 கோடியாக இருந்தது.

    இவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் ரூ.24,527.39 கோடி வருவாயை வணிக வரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.

    அதே போன்று பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது. நடப்பாண்டில் 28.2.2023 வரை பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.15,684.83 கோடி ஆகும்.

    கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.12,161.51 கோடியை விட ரூ.3,523.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

    வணிக வரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களினாலும் இத்துறைகளின் வருவாய் அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×