தமிழ்நாடு செய்திகள்

இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்- கனிமொழி எம்.பி.

Published On 2026-02-05 07:43 IST   |   Update On 2026-02-05 07:43:00 IST
  • நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது.
  • தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொழில் நகரமாகும். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே ஏராளமானோர் தினமும் சிவகாசிக்கு வந்து செல்கின்றனர்.

இந்தியா முழுவதும் இருந்து வர்த்தகர்களும், தொழிலாளர்களும் சிவகாசிக்கு வந்து செல்லும் நிலையில் இங்குள்ள ரெயில் நிலையம் போதிய வசதிகள் இன்றி இருக்கிறது.

ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மாணிக்கம்தாகூர் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். சில வாரங்களாக ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதில் நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

சென்னை பூங்கா ரெயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

Tags:    

Similar News