உள்ளூர் செய்திகள்

டவுன் கோடீஸ்வரன்நகரில் விரிவாக்க பணியால் சாலைக்குள் புகுந்த மரம் - கிளைகளை வெட்டக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2023-02-20 09:02 GMT   |   Update On 2023-02-20 09:02 GMT
  • நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அகலப்படுத்தி புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது.
  • விரிவாக்கம் காரணமாக ஓரமாக இருந்த பழமை வாய்ந்த 3 மரங்கள் சாலையின் உட்புறம் வந்துவிட்டது.

நெல்லை:

நெல்லை-பேட்டை நெடுஞ்சாலையில் கோடீஸ்வரன்நகர் அருகே குளத்தாங்கரை தர்ஹா உள்ளது. அதில் இருந்து காட்சி மண்டபம் வரையிலும் சேதம் அடைந்து காணப்பட்ட சாலையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வந்தனர்.

சாலை விரிவாக்கம்

இந்நிலையில் சமீபத்தில் அந்த பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அகலப்படுத்தி புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. இதனால் முன்பிருந்த சாலையின் அகலத்தை விட சாலை அகலமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் சாலை விரிவாக்கம் காரணமாக ஓரமாக இருந்த பழமை வாய்ந்த 3 மரங்கள் சாலைக்குள் வந்துவிட்டது. இந்த மரங்களை கவனிக்காமல் கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றி செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அப்புறப்படுத்த கோரிக்கை

எனவே சாலையின் பக்கம் சாய்ந்திருக்கும் மரத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தினால் கனரக வாகனங்கள், பஸ்கள் எவ்வித ஆபத்தும் இன்றி அந்த வழியாக சென்றுவரும்.

எனவே அதற்கான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயனிடம் பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப் இன்று கோரிக்கை மனு அளித்தார்.

Tags:    

Similar News