ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் தென்மேற்கு பருவமழை கால பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடந்தது.
விபத்து அசம்பாவிதங்களை தடுக்க மழைகாலங்களில் பெண்கள் ஆற்றில் துணி துவைக்க செல்வதை தவிர்க்க வேண்டும்
- தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் கால மேலாண்மை ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.
- தீயணைப்பு வீர்ர்கள் ஜிஞ்சுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து லைப் ஜாக்கெட், லைப் பாய், கயிறு மூலும் மீட்பு செயல்முறை பயிற்சி அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சியில் தென்மேற்கு பருவமழை கால பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடந்தது.
கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படை மாவட்ட அலுவலர் மகாலிங்கம் அறிவுறுத்தலின்படி தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் கால மேலாண்மை ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். பயிற்சியின்போது பேசிய கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுலவலர் வெங்கடாசலம் வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆற்றங்கரை ஓரங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும். அப்போது பெண்கள் ஆற்றில் துணி துவைக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு சென்றாலும் குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது. மழை பெய்யும் நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்ப கூடாது என்றார்.
மேலும், தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீர்ர்கள் ஜிஞ்சுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து லைப் ஜாக்கெட், லைப் பாய், கயிறு மூலும் மீட்பு செயல்முறை பயிற்சி அளித்தனர்.
இதில் ஜிஞ்சுப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியை கிருஷ்ணவேணி, பள்ளி மாணவர்கள், ஊராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.