உள்ளூர் செய்திகள்
வந்தவாசி ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு
- எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க ரேசன் கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
இதில் வந்தவாசி நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், நகரச் செயலர் தயாளன், நகர்மன்ற உறுப்பினர் கிஷோர்குமார், கூட்டுறவு சங்கச் செயலர் காலேஷா, இளைஞர் அணி செயலாளர் கோமாதா சுரேஷ், நகர நிர்வாகி சி பி பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் சந்தோஷ், அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.