கால் நடைகளுக்கு சிகிச்சை அளித்த காட்சி.
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
- 400 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
- விவசாயிகள் 3 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் கெங்கை சூடாமணி, கிராமத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சோமசுந்தரம், உதவி இயக்குனர்கள், ஜெயக்குமார், ராமன், ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சேத்துப்பட்டு, கால்நடை மருத்துவமனை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம், மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கெங்கைசூடாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா வெங்கடேசன், தலைமை தாங்கினார். துணை தலைவர் வடிவேல், முன்னிலை வகித்தார்.
முகாமில் 200 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், 30 பசு மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி செலுத்துதல், 400 கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்துதல், 200 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பு மருந்து, 300 வெள்ளை, மற்றும் செம்மறி, ஆடுகளுக்கு நோய் தடுப்பு மருந்து செலுத்துதல், 10 நாய்களுக்கு வெறி நாய் கடிப்பு தடுப்பு ஊசி செலுத்துதல், 30 கால்நடைகளுக்கு தாது உப்பு கட்டிகள், உள்ளிட்ட 400கால்நடைகளுக்கு சேத்துப்பட்டு, கால்நடை மருத்துவர் ஆரிப், மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் தாஸ், ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
முன்னதாக சிறந்த 3 கடேரி பசு கன்றுகளை தேர்ந்தெடுத்து அதன் உரிமையாளருக்கு பரிசு வழங்கினார்கள். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.