உள்ளூர் செய்திகள்

100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

Published On 2023-01-03 14:17 IST   |   Update On 2023-01-03 14:17:00 IST
  • ஊதியம் வழங்க வலியுறுத்தல்
  • போக்குவரத்து பாதிப்பு

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே உள்ள கேளூர் அணைப்பேட்டை பகுதியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட னர்.

இதையறிந்த சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, போராட்டம் நடத்தியவர்களிடம் ஊதியம் தர உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News