உள்ளூர் செய்திகள்

மாணவர்களால் தீட்டப்பட்ட சுவர் ஓவியங்களை படத்தில் காணலாம்.

உடுமலையில் சுவர் ஓவியம் மூலம் கவரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி

Published On 2022-07-09 11:41 GMT   |   Update On 2022-07-09 11:41 GMT
  • மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் வருவதற்கு சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது.
  • இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர்.

உடுமலை :

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பழனியாண்டவர் நகர் நகரில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது.

மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதற்கும் பள்ளி வருவதற்கு தயங்காமல் இருப்பதற்கும் சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது. மாணவர்களே தங்கள் முயற்சியால் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் இந்த சுவர் ஓவியங்களை வரைந்து உள்ளனர். இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஓவியம் வரைவதால் மாணவர்கள் மனநிலையும் ஒருநிலைப்படும். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் இரா. சண்முகப்பிரியா தெரிவித்தார்.

மேலும் பெற்றோர்கள் ,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News