உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பிளஸ்-2 தேர்வு எழுதாத மாணவர்களின் விவரம் கண்டறியும் பணிகள் தொடக்கம்

Published On 2023-05-11 06:59 GMT   |   Update On 2023-05-11 06:59 GMT
  • மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
  • துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது.

தாராபுரம் :

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ந தேதி துவங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.இவர்கள் பள்ளிக்கு வராதவர்கள் என தெரிவிக்கப்பட்டதால் நலத்திட்ட பொருட்கள், அதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்த கேள்விகள் எழுந்தன. பள்ளிக்கு வந்து தேர்வெழுத வராதவர்கள் நிலை குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்வெழுதாத மாணவர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம், கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் ஆப்சென்ட் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உயர்கல்வி சேர்க்கையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆப்சென்ட்டான மாணவர்களில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பட்டியல் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News