உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாதப்பூர் முத்துக்குமாரசாமி.

பல்லடத்தில் ஆடி பண்டிகையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2022-08-04 04:24 GMT   |   Update On 2022-08-04 04:24 GMT
  • சிறப்பு பூஜையும், அபிசேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது.
  • முத்துக்குமார சாமியை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

பல்லடம் :

பல்லடம், ஆடி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதன்படி பல்லடம் முத்துக்குமாரசாமி மலை கோவில்,சிறப்பு பூஜையும்,அபிசேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது. இதில் மாதப்பூர், பல்லடம்,பொங்கலூர்,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் முத்துக்குமார சாமியை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி பண்டிகை முன்னிட்டு மலை கோவிலில் இடுவாய் சரவணா காவடி குழுவினரின், காவடி ஆட்டம் நடைபெற்றது இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதேபோல பல்லடம் தண்டபாணி கோவில், அங்காளஅம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில், சித்தம்பலம் நவகிரக கோட்டை, உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி பண்டிகை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News