உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் டாம்கோ திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று தொழில் செய்து வரும் நிறுவனங்களை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் ஆய்வு செய்த காட்சி.

சிறுபான்மையினருக்கான திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தரவு

Published On 2022-07-30 07:41 GMT   |   Update On 2022-07-30 07:41 GMT
  • ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்ட சிறுபான்மை நலத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:-

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள சிறுபான்மையின சமூகத்தினா் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிக்கு தலா ரூ.1.90 லட்சம் என ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, முஸ்ஸிம் மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம், உலமா மற்றும் இதர பணியாளா்களுக்கு நல வாரியம் சாா்பில் மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம்,

தேசிய கல்வி உதவித் தொகை (என்.எஸ்.வி), மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கிறிஸ்தவ தேவாலயம் புனரமைக்கும் திட்டம், டாம்கோ திட்டம் மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் ஆகியன சிறுபான்மையினா் நலத் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.ஆகவே, சிறுபான்மையினருக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், மகளிா் திட்ட இயக்குநா் மதுமிதா, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News