உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

டிஜிட்டல் மின் கட்டணம் வசூலை அதிகரிக்க உத்தரவு

Published On 2023-02-17 05:25 GMT   |   Update On 2023-02-17 05:25 GMT
  • இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர்.
  • 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர்.

திருப்பூர் :

மின் கட்டணத்தை வசூல் மையங்கள், அரசு, இ - சேவை மையங்களில் ரொக்க பணம், காசோலை, வரைவோலையில் செலுத்தலாம். அவற்றில் அலுவலக நேரத்தில் மட்டுமே செலுத்த முடியும்.மின் வாரிய இணையதளம், செல்போன் செயலி, பாரத் பில் பே போன்ற டிஜிட்டல் முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம்.

மொத்தம் உள்ள 3.40 கோடி மின் நுகர்வோர்களில், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட இலவச திட்ட பயனாளிகள் போக, இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதில் 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தற்போது பல்பொருள் அங்காடி முதல் தள்ளுவண்டி காய்கறி கடை வரை, கூகுல் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது.எனவே அனைத்து மின் நுகர்வோர்களிடம் இருந்தும், டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் எப்படி கட்டணம் செலுத்துவது என்பது தொடர்பாக பிரிவு அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில் விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதனால் கட்டண மையங்களுக்கு வந்து நுகர்வோர்கள் சிரமப்பட வேண்டியதில்லைங வசூல் பணமும் உடனே மின் வாரிய வங்கி கணக்கில் சேர்ந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News