உள்ளூர் செய்திகள்

உடுமலை வெங்கடேசபெருமாள்

உடுமலை திருப்பதி கோவிலில்புண்ணியகால வழிபாடு- நாளை நடக்கிறது

Published On 2022-06-07 08:51 GMT   |   Update On 2022-06-07 08:51 GMT
  • பொருளாதார ரீதியாகவும் கொடுக்கல் வாங்கல் நல்லமுறையில் நடைபெறும்.
  • புண்ணிய கால நாளை வீணாக்காமல் அவரவர் சக்திக்குத் தக்கவாறு நற்காரியங்கள் செய்து பயனடையலாம்.


உடுமலை:

உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் புதாஷ்டமி புண்ணிய காலம் நாளை (8 ந்தேதி) நடக்கிறது.

புதன்கிழமையும் அஷ்டமி திதியும் ஒன்றாக சேரும் நாள் புதாஷ்டமி ஆகும்.இது சூரிய கிரகணத்திற்கு ஒப்பானநாள் என்பதால் அன்று செய்யப்படும் மந்திர ஜெபம், பாராயணம், மற்றும் தானம், ஆலயதரிசனம் மற்ற நாட்களில் செய்வதால் ஏற்படும் பலனை விட அதிகமான பலனைத் தரும். இது போன்ற புண்ணிய கால நாளை வீணாக்காமல் அவரவர் சக்திக்குத் தக்கவாறு நற்காரியங்கள் செய்து பயனடையலாம்.

பொருளாதார ரீதியாகவும் கொடுக்கல் வாங்கல் நல்லமுறையில் நடைபெறும். பெருமாள் கோவிலில் 3 நெய் தீபமேற்றி தங்களுக்கு தெரிந்த விஷ்ணு ஸ்லோகங்கள் அல்லது நாமாக்களை பாராயணம் செய்து (விஷ்ணு சகஸ்ரநாமம்) பெருமாளுக்கு பச்சைப்பயறு, வெல்லம், நிவேதனம் செய்து வழிபட்டால் நிச்சயம் பொருளாதார நிலையில் உயர்வு வரும் என உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News