தமிழ்நாடு செய்திகள்
கள்ளக்குறிச்சியில் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை - முதலமைச்சர் திறந்து வைத்தார்
- வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் திறந்து வைத்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வருகை தந்தார்.
முன்னதாக உளுந்தூர்பேட்டையில் காலணி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கள்ளக்குறிச்சி வருகை தந்த முதலமைச்சர் சாலைவலம் மேற்கொண்டார்.
அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முதலமைச்சர் பொதுமக்களிடம் கைகுலுக்கியும், கையசைத்தும் சென்றார்.
இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.