உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய காட்சி.

பல்லடம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

Published On 2022-09-02 12:36 IST   |   Update On 2022-09-02 12:36:00 IST
  • ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
  • சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாமல் மிதி வண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும்

பல்லடம் :

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) ஆனந்தி வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் 245 மாணவிகளுக்கு ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பேசியதாவது:- சைக்கிள் என்பது பயணத்திற்கு மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத வாகனம் ஆகும். அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாமல் மிதி வண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மிதி வண்டி பயணம் செய்து கல்வி கற்றேன். அதனால் தான் பொதுவாழ்வில் இன்று உடல் வலுவோடு நான் இருக்கிறேன். அதற்கு மிதி வண்டி ஓட்டுதல் மற்றும் உடற்பயிற்சி தான் காரணம். இதன் மூலம் பெட்ரோல், டீசல் செலவை குறைக்கலாம்.தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைய சமுதாயம் சீர்கெடுகிறது. அதனை ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

போதை பொருட்களை விற்றால் அல்லது பயன்படுத்தினால் 1098 என்ற எண்ணிற்கு போன் செய்தால் போதும் அவர்களின் விபரம் வெளியே வராது. அச்சப்பட வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரகுமார், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News