உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய போது எடுத்த படம். அருகில் அமைச்சர் கயல்விழி, தி.மு.க.வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க நிர்வாகிகள்-தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் - திருப்பூர் கிழக்கு- வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-08-23 17:12 IST   |   Update On 2022-08-23 17:12:00 IST
  • செய்தித்துறை அமைச்சரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.
  • ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், மண்டல தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் :

தி.மு.க. திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாளை (புதன்கிழமை) திருப்பூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டத்தின் சார்பில் பல்லடம் வடுகபாளையம் அருகே சிறப்பான வரவேற்பு அளிப்பது, இதில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு கட்சியை வலுசேர்க்க அயராமல் பணியாற்றுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News