உள்ளூர் செய்திகள்

2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்ட காட்சி.

மழை வேண்டி அரச-வேம்பு மரத்திற்கு திருமணம்

Published On 2023-03-28 08:36 GMT   |   Update On 2023-03-28 08:36 GMT
  • 40 வயதான அரசமரம் - வேப்பமரம் ஆகிய 2 மரங்களும் அருகருகே வளர்ந்து உள்ளன.
  • மக்கள் கடவுளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பல்லடம் :

பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியில், சுமார் 40 வயதான அரசமரம்- வேப்பமரம் ஆகிய 2 மரங்க ளும் அருகருகே வளர்ந்து உள்ளன. இதனை அங்குள்ள மக்கள் கடவு ளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கி ழமை களில் வழிபாடு நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் அரசு -வேம்பு மரங்களுக்கு திருமணம் செய்ய அந்தப் பகுதி மக்கள் முடிவெ டுத்தனர். இதை யடுத்து அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக அரச மரத்துக்கு வேட்டியும், வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு கள் நடந்தன. மேலும் 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டது.

அதை த்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, மந்திரங்கள் ஓதி, பொது மக்கள் புடை சூழ வேப்ப மரத்துக்கு தாலி கட்டி ,அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை தண்டபாணி கோவில் அர்ச்சகர் நாகராஜ குருக்க ள் நடத்தி வைத்தார். அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News