உள்ளூர் செய்திகள்

சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த காட்சி.

பல்லடம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு

Published On 2022-08-20 06:14 GMT   |   Update On 2022-08-20 06:14 GMT
  • தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
  • 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்லடம் :

பல்லடம் அரசு மருத்துவமனை கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குபல்லடம், பொங்கலூர்,சுல்தான்பேட்டை,செஞ்சேரிமலை,ஜல்லிபட்டி,செஞ்சேரிப்புத்தூர்,வேலம்பாளையம்,காமநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மேலும் இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அப்போது அவரிடம் நோயாளிகள் குளியலறை மற்றும் சுகாதார வளாகத்தில் கடந்த பல நாட்களாக தண்ணீர் வருவது இல்லை. துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. குடிப்பதற்கு குடிநீரும் இல்லை என சரமாரியாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் பிரேமலதா தெரிவித்தார்.

Tags:    

Similar News