உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் ரோட்டில் குப்பை கொட்டிய ஒட்டலுக்கு ரூ 5 ஆயிரம் அபராதம்

Published On 2022-08-04 05:17 GMT   |   Update On 2022-08-04 05:17 GMT
  • கோழிக்கழிவுகளை போட்ட நபரை பிடித்து வெள்ளகோவில் நகராட்சி தலைவிடம் ஒப்படைத்தனர்.
  • நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பலமுறை அறிவிக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் 2 ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளகோவில் கோவை ரோட்டில் சோழா ஓட்டல் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வரும் நிர்வாகத்தினர், கோழி கழிவுகளை குமாரவலசு என்ற பகுதியில் போட்டுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் கோழிக்கழிவுகளை போட்ட நபரை பிடித்து வெள்ளகோவில் நகராட்சி தலைவி மு. கனியரசியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் எஸ்.சரவணன் கோழிக்கழிவு கொட்டிய சோழா ஓட்டல் நிர்வாகத்திடம் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு ஹோட்டல் திறக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் சாலையோரங்களில் யாரேனும் குப்பைகளை கொட்டினால் திடக்கழிவு மேலாண்மை விதியின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர மன்ற தலைவி மு. கனியரசி மற்றும் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News