தமிழ்நாடு செய்திகள்

இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published On 2026-02-17 13:25 IST   |   Update On 2026-02-17 13:25:00 IST
  • புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.
  • பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெட்ரிக் கடன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தளங்கள்.

* ரூ.331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்பட உள்ளன.

* பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம். பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது.

* விவசாயிகளுக்காக 24 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவர் செயலியை இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

* வெள்ளக்காலங்களில் நெல்மணிகள் வீணாவதை தடுக்க ரூ.495 கோடியில் 130 நவீன சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளது.

* புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.

* பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

* பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 5 ஆண்டுகளில் அரசு மீன் பண்ணைகள் மூலம் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

* அலைகள் திட்டம் மூலம் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நுண் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

* விபத்தில் உயிரிழக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கான மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

* தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News