உள்ளூர் செய்திகள்

திருப்பூர் கலெக்டர் வினீத் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

சிவன்மலை ஊராட்சியில் சிறு விளையாட்டு அரங்கம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு

Published On 2023-04-22 11:18 GMT   |   Update On 2023-04-22 11:18 GMT
  • 7 ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க இடத்தை தேர்வு செய்தும் விரைவில் பணிகளை தொடங்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
  • சிறப்பாக விளையாட்டு அரங்கம் செயல்பட முழு ஒத்துழைப்பை பஞ்சாயத்து மூலம் கொடுப்போம் என்றார்.

காங்கயம் :

தமிழகத்தில் விரைவில் 10 சட்டமன்ற தொகுதியில் அரசின் பொது நல புதிய திட்டங்களில் ஒன்றான சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் காங்கயம் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட சிவன்மலை ஊராட்சி எல்லையான கல்லேரி ரோட்டில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அதற்கான இடத்தை தேர்வு செய்தும் விரைவில் பணிகளை தொடங்கவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருப்பூர் கலெக்டர் வினீத் இடத்ைத நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்குமார் தலைமையில் சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துைண தலைவர் சண்முகம், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், படியூர் பஞ்சாயத்து தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், சிவன்மலை கிளை தி.மு.க. செயலாளர் சிவகுமார் முன்னிலையில் கலெக்டருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சிவன்மலை பஞ்சாயத்து செயலாளர் காளியம்மாள் நன்றி கூறினார். இது பற்றி சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் கே.கே.துரைசாமி கூறும் போது, தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தொடங்கப்படும் தமிழக அரசின் சிறு விளையாட்டு அரங்கம் எங்களது காங்கயம் தொகுதியில் அதுவும் குறிப்பாக நமது சிவன்மலை பஞ்சாயத்து எல்லையில் அமைய உள்ளதை வரவேற்கிறோம். இளைஞர்கள், இளம்பெண்களின் உடல், மனநலம் மற்றும் எதிர்கால நலன் கருதி சிறப்பாக விளையாட்டு அரங்கம் செயல்பட நாங்கள் முழு ஒத்துழைப்பை எங்களது பஞ்சாயத்து மூலம் கொடுப்போம் என்றார். 

Tags:    

Similar News